ஐஸ்வர்யா லட்சுமியின் திருமண கனவு... வாழ்க்கைத் துணைக்கு வைத்துள்ள முக்கிய நிபந்தனை

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது திருமண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் திருமண கனவு... வாழ்க்கைத் துணைக்கு வைத்துள்ள முக்கிய நிபந்தனை
Published on

சென்னை,

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது திருமண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். தற்போது அவர் பேசியுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகை

மலையாளத் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். 'ஜகமே தந்திரம்', 'கார்கி', 'கேப்டன்', 'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி', 'மாமன்', 'தக் லைப்' உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள 'கட்டா குஸ்தி-2' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

திருமணம் குறித்து என்ன சொன்னார்?

சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ஆரம்பத்தில் திருமணம் என்ற உறவுக்குள் நுழைவதில் தனக்கு பல குழப்பங்களும் தயக்கங்களும் இருந்ததாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "'கட்டா குஸ்தி-2' படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக நடித்தபோது, என்னுள் இருந்த தாய்மை உணர்வு விழித்தெழுந்தது. அதன்பிறகு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கினேன். என் வாழ்க்கைத் துணையாக வருபவர் எனக்கு நல்ல கணவராக மட்டுமல்ல, என் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, நம்பிக்கையுடன் வாழ்க்கையைப் பகிரக்கூடிய ஒருவரைத் தான் நான் விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த மனம் திறந்த பேச்சு, அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com