கட்டுப்போட்ட கையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று அலங்கரித்தார்.
கட்டுப்போட்ட கையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்
Published on

பிரான்ஸ்,

பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர்.

வருடாவருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய், தனக்கான பிரத்யேக அழகு உடையுடன் நடை போட்டார்.

முன்னதாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்றார் ஐஸ்வர்யா ராய். அப்போது, கையில் அடிபட்டு கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்த ரசிகர்கள் பதறிப் போயினர். அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா, இந்த வருடமும் மிஸ் ஆகக் கூடாது என்பதற்காக கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் அந்த விழாவில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com