மீண்டும் திகில் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார்.
மீண்டும் திகில் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்கிறார். கனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது தமிழில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களும், 3 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

இந்த நிலையில் புதிய திகில் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய திகில் கதைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். தற்போது மீண்டும் திகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டி உள்ளது. அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஆசிரியையாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com