'ரீமேக்' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் தமிழில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் டைரக்டு செய்துள்ளார்.
'ரீமேக்' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

ரீமேக் படத்தில் நடித்தது ஏன்? என்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது "மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்று என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது.

படத்தை பார்த்தேன், 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார். திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்துவிடுகிறது.

அதற்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற சிறந்த படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்'' என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com