கன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் டியர். இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தை ரோஹித் படக்கி இயக்குகிறார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.

தற்போது அவரின் கைவசம் கருப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க, மோகன்தாஸ் போன்ற தமிழ் படங்களும், அஜயன்டே ரண்டாம் மோஷனம் மற்றும் ஹெர் ஆகிய மலையாள படங்களும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com