ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' படத்தின் டிரைலர் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' படத்தின் டிரைலர் வெளியீடு
Published on

சென்னை,

'லாக்கப்' திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா சங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே சரத் குமார் படத்தொகுப்பு செய்கிறார்.

'சொப்பன சுந்தரி' படத்தின் மோஷன் போஸ்டர், மற்றும் 'பணக்காரி' என்ற பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் 'சொப்பன சுந்தரி' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com