ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

பரத் தர்ஷனின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஓ சுகுமாரி’ படத்தில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'தீயவர் குலை நடுங்க' என்ற படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் ஓ...!சுகுமாரி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார். இதில் இளம் நடிகர் திருவீர் நாயகனாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.இதில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு , ஆமணி, முரளிதர் , ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் தாமினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்துக்கு சி.ஹெச்.குஷேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் மஞ்சிராஜு இசை அமைக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com