ஐஸ்வர்யா ராஜேஷின் “ஓ சுகுமாரி” படத்தின் டீசர் வெளியானது

பரத் தர்ஷன் இயக்கும் ‘ஓ சுகுமாரி’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் நடித்துவருகின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் “ஓ சுகுமாரி” படத்தின் டீசர் வெளியானது
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘தீயவர் குலை நடுங்க’ படம் வெளியானது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார். இதில் இளம் நடிகர் திருவீர் நாயகனாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.இதில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு , ஆமணி, முரளிதர் , ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் அவர் தாமினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்துக்கு சி.ஹெச்.குஷேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் மஞ்சிராஜு இசை அமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவிருக்கிறது

‘ஓ சுகுமாரி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘ஓ சுகுமாரி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com