திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருத்தணி முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2012-ல் தனுஷை வைத்து இயக்கிய 3 படத்தின் மூலம் சினிமா இயக்குனராக அறிமுகமானார். கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். தனது தந்தை ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு ஐஸ்வர்யா இன்று வருகை தந்தார். மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்த ஐஸ்வர்யாவிற்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயிலில் அமர்ந்து அவர் சிறிது நேரம் தியானம் செய்தார். புறப்பட்டு செல்லும் முன்பு கோயில் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். ஐஸ்வர்யாவின் திடீர் வருகை காரணமாக, அவர் மீண்டும் புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளை துவங்கியிருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com