

மும்பை,
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார்.இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகமாக 'சிங்கம் ரிட்டன்ஸ்' என்கிற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, தற்போது 'சிங்கம் அகெய்ன்' என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூலித்தது. இப்படம் 4 நாட்களில் ரூ.125 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இப்படம் ஒரே வாரத்தில் 260 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 14 கோடி பார்வைகளை கடந்த சாதனையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அர்ஜுன் கபூர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி குறித்து அர்ஜுன் கபூர் பேட்டியில் கூறியதாவது: 'என்னுடைய நடிப்பு மக்களுக்கு பிடித்துள்ளது மகிழ்ச்சி. இது என்னுடைய மறுபிறப்பு, புதிய தொடக்கம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்' என்றார்
View this post on Instagram