8 நாட்களில் ரூ. 105 கோடி வசூல் செய்த அஜய் தேவ்கனின் “தமால் 4”

இந்திர குமார் இயக்கியுள்ள ‘தமால் 4’ படத்தில் அஞ்சலி ஆனந்த், ஈஷா குப்தா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
8 நாட்களில் ரூ. 105 கோடி வசூல் செய்த அஜய் தேவ்கனின்  “தமால் 4”
Published on

‘தமால் 4’ திரைப்படம் 8 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார்.

இதில் சிங்கம் ரிட்டன்ஸ், சிங்கம் அகெய்ன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தி திரையுலகில் காதலர்களாக இருந்து பின்னர், திருமண பந்தத்தில் இணைந்த ஜோடி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை கஜோல். தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் கஜோல்.

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இவர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘தமால் 4’. இந்திர குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஞ்சலி ஆனந்த், ஈஷா குப்தா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், தற்போது வசூலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

காமெடி எண்டர்டெயின்மண்ட் ஆக ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘தமால் 4’ திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது.

இந்நிலையில், ‘தமால் 4’ திரைப்படம் 8 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், முதல் 8 நாட்களில் பட்ஜெட்டில் பாதி அளவிற்கும் குறைவான வசூலை மட்டுமே ஈட்டியிருப்பதால், எதிர்பார்த்த அளவிலான தொடக்கத்தை பெறவில்லை என்ற கருத்து பாலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், வரும் வார இறுதி மற்றும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com