அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’.. வெறும் 4 நாட்களில் ரூ.308 கோடி வசூல்

‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’.. வெறும் 4 நாட்களில் ரூ.308 கோடி வசூல்
Published on: 

சென்னை,

படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.308 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வசூல் அதிகரித்து வருகிறது.

அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள 3-ம் பாகம்

மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றன. இதன் தொடர்ச்சியாக 3-ம் பாகமாக ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ (Drishyam: The Conclusion) திரைப்படம் கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியானது.

மீண்டும் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன்

முந்தைய இரண்டு பாகங்களிலும் தனது புத்திசாலித்தனமான திட்டங்களால் குடும்பத்தை காப்பாற்றி, போலீசாரை திணறடித்த விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் மீண்டும் நடித்துள்ளார். ஸ்ரேயா சரண் மற்றும் தபு ஆகியோரும் தங்களது முந்தைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். குறிப்பாக ஜெய்தீப் அஹ்லாவத்தின் கதாபாத்திரம் படத்தின் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

4 நாட்களில் ரூ.308 கோடி வசூல்

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் வெளியான ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.308 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வசூல் அதிகரித்து வருவதால், விரைவில் இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com