அஜய் கார்த்தி நடிக்கும் “டார்க்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரித்துள்ள ‘டார்க்’ படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
அஜய் கார்த்தி நடிக்கும் “டார்க்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படம் ஜீலை 3ம் தேதி வெளியாக உள்ளது.

ஹாரர் கதைக்களத்தில் உருவான ‘டார்க்’

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ‘டார்க்’. இந்த படத்தை கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கான கதையை ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே. பாபு எழுதி தயாரித்துள்ளார். நடிகை அஞ்சனா முருகன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், இயக்குநர் கே. பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைக்கலாஜிகல் ஹாரர் படமாக உருவானது

எம்ஜி ஸ்டூடியோஸ் மற்றும் 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அதைத்தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில், பல அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக ‘டார்க்’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

இதற்கிடையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

சமீபத்தில் ‘டார்க்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. மர்மம், பரபரப்பு மற்றும் திகில் கலந்த காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லர், மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருவதுடன் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘டார்க்’ திரைப்படம் வரும் ஜீலை 3ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com