விஜய் ஆண்டனியின் “பூக்கி ” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
விஜய் ஆண்டனியின் “பூக்கி ” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். `நான்' படம் மூலமாக நடிகராக அடையாளம் பெற்ற இவர், அடுத்தடுத்து `சலீம்', `பிச்சைக்காரன்', `சைத்தான்', `எமன்' என வெற்றி படங்களை கொடுத்தார். `கொலை', `ரத்தம்', `ஹிட்லர்' வரிசையில் சமீபத்தில் நடித்த `மார்கன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனியின் 25-வது படமான 'சக்தித் திருமகன்' படம் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த மார்கன்' படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்தவர் அஜய் தீஷன். இவர் விஜய் ஆண்டனியின் அக்கா மகன். சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் மருமகன் அஜய்க்காக பூக்கி என்ற படத்தை தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. இன்று இந்த பட பூஜை நடந்தது. சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில், நான் 10க்கும் அதிகமான படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் நடிக்காத முதல் படம் இது. அடுத்து மற்ற ஹீரோக்களை வைத்தும் படம் தயாரிக்கிறேன். தனுஷா ஹீரோயின் என்றார்.

பிச்சைக்காரன் படத்திற்கு பின் மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு படத்தில் நடிக்க போகிறார். அனேகமாக இது பிச்சைக்காரன் 3ஆக இருக்கலாம். இந்த படத்திலும் விஜய் ஆண்டனி மருமகன் அஜய் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com