மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி


மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி
x

அஜித்தின் 64-வது படம் 'குட் பேட் அக்லி' படத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.

சென்னை,

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "நான் அஜித் சாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளேன். அஜித்தின் 64-வது படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது 'குட் பேட் அக்லி' படத்திலிருந்து வேறுபட்ட படமாக இருக்கும் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும். அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் பிற விவரங்கள் விரைவில் வரும்". என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story