தனது முந்தைய சாதனையை முறியடித்த அஜித்!


தனது முந்தைய சாதனையை முறியடித்த அஜித்!
x
தினத்தந்தி 4 March 2025 3:41 PM IST (Updated: 4 March 2025 4:48 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் அஜித் குமார் ஸ்பெயினில் கார் ரேசிங் போட்டியில் மணிக்கு 270 கி.மீ வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின்,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அவருடைய அணி பங்கேற்றது. பந்தயத்துக்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினாலும் அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தை தட்டிச் சென்றது. இவரது வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மணிக்கு 270 கி.மீ வேகத்தில் காரை இயக்கி 1.47 நிமிடங்களில் இலக்கை எட்டி, தனது முந்தைய சாதனையை முடியடித்துள்ளார் அஜித் குமார். இதற்கு முன்பாக 240 கி.மீ வேகத்தில் காரை இயக்கி 1.51 நிமிடங்களில் இலக்கை எட்டியிருந்தார்.

1 More update

Next Story