

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் அடுத்த வரிசையில் இருப்பவர்கள் விஜய், அஜித். இப்படி போட்டியாளர்கள் என்று சொல்லப்படும் நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களுக்குள் எப்போதும் பிரச்சனையாக தான் இருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் உருவான விவேகம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூலை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகை கஸ்தூரியிடம் ஒரு ரசிகர் உங்களுக்கு விஜய், சூர்யா, அஜித் இதில் யாரை பிடிக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த மூவரில் அஜித் தான் பிடிக்கும். மற்ற இருவரும் தங்களது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்கள். ஆனால் உண்மையில் அஜித் தான் சர்வைவா என கூறியுள்ளார்.