மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்


மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்
x

இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.

ரோம்,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. விடா முயற்சி படம் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி இல்லதாதால், குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இந்த படம் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் படத்தை உற்சாகத்துடன் கொண்டாடி வரவேற்றனர்.

சிறு வயதில் இருந்தே ரேஸ் மீது பிரியம் கொண்ட அஜித்குமார் பைக் மற்றும் காரில் ரேஸ் செல்ல விருப்பப்படுவார். ஒவ்வொரு திரைப்படம் முடியும் போது ஒரு லாங் டிரைவ் பைக்கில் சென்று வருவார். அந்த வகையில் சமீப நாட்களாக அஜித்குமார் கார் ரேசில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தநிலையில், இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.இருப்பினும் இதில் காரில் இருந்த அஜித் குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story