அஜித்குமாரின் “டேர் டெவில்” திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

அஜித்குமாரின் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், சுனில், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அஜித்குமாரின் “டேர் டெவில்” திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
Published on: 

அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா தொடர்பான தகவல்கள் மற்றும் கிளாப் போர்டு காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள 64-வது திரைப்படம் ‘டேர் டெவில்’. இந்தப் படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார், தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பூஜையில் பங்கேற்ற ஷாலினி

‘டேர் டெவில்’ படத்தின் பூஜை சென்னையில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தொடக்க விழா தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அஜித்குமார் துபாயில் இருப்பதால், படத்தின் பூஜை நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்கவில்லை. அவர் நவம்பர் 6-ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படப்பிடிப்பு தொடங்கும் நாளில் அஜித் படக்குழுவினருடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளத்துடன் ‘டேர் டெவில்’

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளாட்ர். மேலும், உன்னி முகுந்தன், சுனில், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அதிரடி காட்சிகளும் வித்தியாசமான கதைக்களமும் இடம்பெறுமா என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு எப்போது?

‘டேர் டெவில்’ படத்தின் முழுமையான படப்பிடிப்பு நவம்பர் 12-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது.

திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை நிகழ்வின் காட்சிகளைப் படக்குழு பகிர்ந்துள்ளது.

X