உடல் எடை குறைத்தது குறித்து மனம் திறந்த அஜித்

ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நாஉடல் உறுதியுடன் இருக்க நினைத்தேன் என அஜித் தெரிவித்துள்ளார்
சென்னை,
அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித் தற்போது கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கார் ரேஸிங்கில் ஈடுபட உடல் எடை குறைத்தது குறித்து அஜித் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன். என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.என தெரிவித்தார் .
Related Tags :
Next Story






