3 வேடங்களில் அஜித்?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அவர் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
3 வேடங்களில் அஜித்?
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகின்றார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அஜித்தின் 63வது படத்தை . 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் . அஜித்தின் 63வது படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 'குட் பேட் அக்லி'படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அவர் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2006 -ம் வெளியான வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது மீண்டும் அஜித் மூன்று ரோலில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பதை எகிற செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com