ரீ-ரிலிஸாகும் அஜித்தின் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"


ரீ-ரிலிஸாகும் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
x
தினத்தந்தி 10 April 2025 9:53 PM IST (Updated: 10 April 2025 9:54 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளது.

சென்னை,

யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித்.'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2000-ல் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித்துடன் மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற 'என்ன சொல்ல போகிறாய்' பாடலுக்காக பாடகர் சங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை வென்றார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை படக்குழு ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story