தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்!

தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அதன்படி, அவர் இயக்கிய முதல் படம் 'பவர் பாண்டி'. இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. 2-வதாக தனுஷ் இயக்கிய படம் 'ராயன்'. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், 'குபேரா, தேரே இஷ்க் மெய்ன்' என்ற படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, அஜித், தனுஷ் காம்போவில் புதிய படம் உருவாக உள்ள தகவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com