பெல்ஜியத்தில் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்ட அஜித்

ஜிடி 4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.
பெல்ஜியம்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. எனினும் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு முன்பு நடைபெற்ற கார் பந்தயங்களிலும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் கார் ரேஸில் நேற்று முதல் பாகமாக 6.5 மணி நேரம் ரேஸ் நடைபெற்றது. 2வது பாகமாக இன்றும் 6.5 மணி நேர ரேஸ் நடைபெறவுள்ளது. இதில் அஜித் உட்பட 3 ஓட்டுனர்கள் மாறி மாறி காரை இயக்கவுள்ளனர்.






