கார் பந்தயத்தின்போது விபத்தில் சிக்கிய அஜித்...வெளியான வீடியோ

ஜிடி 4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.
Ajith was involved in an accident during a car race...video released
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்துக் கொண்டுள்ளார்.

இன்று நடைபெறும் இந்த ரேஸ் தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறுகிறது. இதில் அஜித் உட்பட 3 ஓட்டுனர்கள் மாறி மாறி காரை இயக்கவுள்ளனர்

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சியின்போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. எனினும் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்ததாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ இனையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற கார் பந்தயங்களிலும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com