அஜித்தின் அர்ப்பணிப்பு: வியந்து பதிவிட்ட "குட் பேட் அக்லி" இயக்குனர்!

நடிகர் அஜித்தை புகழ்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் அர்ப்பணிப்பு: வியந்து பதிவிட்ட "குட் பேட் அக்லி" இயக்குனர்!
Published on

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த 28-ம் தேதி 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் தற்போது பலரது பார்வைகளை கடந்துவரும்நிலையில், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை 'குட் பேட் அக்லி' படம் படைத்திருக்கிறது. அதன்படி, 35 மில்லியன் பார்வைகளை இது கடந்திருக்கிறது.

உலகளவில் 'குட் பேட் அக்லி' படம் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தனது பட வேலைகளை முடித்து கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " உங்களது கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும் சார். இது மிகவும் கடினமான விடாமுயற்சியுள்ள ஒரு விளையாட்டு. நீங்கள் இதற்காக உங்களை அர்பணித்ததும் கடினமாக உழைத்ததுக்கும் மிகவும் பெரிய விஷயம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க வேண்டும் சார். உங்களை நேசிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் அஜித்தின் கார் பந்தய வீடியோக்களையும் அதில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com