அஜித்தின் “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்பட டிரெய்லர் வெளியானது

அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்.
அஜித்தின் “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்பட டிரெய்லர் வெளியானது
Published on

அஜித்குமாரின் “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்படத்தின் டிரெய்லரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி

‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஆவணப்படத்தில் ரேசிங் உலகின் உண்மை தருணங்கள்

இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஆவணப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியானது

இந்த நிலையில், அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவண படத்தின் டிரெய்லரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லர் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தியேட்டரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com