உதயநிதி தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படம்


உதயநிதி தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படம்
x
தினத்தந்தி 25 Jan 2025 6:46 PM IST (Updated: 25 Jan 2025 6:58 PM IST)
t-max-icont-min-icon

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் கார் பந்தயத்தின் போது இனிமேல் வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க போகிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அஜித் குமார் அடுத்ததாக நடிக்க உள்ள புதியபடம் (64-வது படம்) குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் 'பில்லா, ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story