பிரம்மாண்டமாக உருவாக உள்ள அஜித்தின் 'விடாமுயற்சி'

நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய திரைப்படமான ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் குறித்த தகவல் கசிந்துள்ளது.
பிரம்மாண்டமாக உருவாக உள்ள அஜித்தின் 'விடாமுயற்சி'
Published on

சென்னை

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவிப்பு. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது.

விடமுயற்சியின் கீழ் 'முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது' என குறிப்பிடபட்டு உள்ளது. படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பு செலவு 220 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத், விடமுயற்சிக்கு இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன் நிறுவனம் மகன் திருமேனிக்கு இதுவரை ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக தொகையை இந்த படத்திற்காக கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கலக தலைவன்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com