அஜித்தின் விஸ்வாசம் படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படம் ட்விட்டர் டிரெண்டிங்கில் புதிய சாதனை
Published on

சென்னை,

விவேகம், வேதாளம், வீரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் உருவான படம் விஸ்வாசம். அஜித் - நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியானது.

குடும்பக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதிக வசூலைக் குவித்தது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 2019-ம் ஆண்டில் அதிகம் பிரபலமான ஹேஷ்டேக்குகளில் விஸ்வாசம் படத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

2019-ம் ஆண்டில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலை அறிந்த இசையமைப்பாளர் டி.இமான், அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டர் மார்க்கெட்டிங் இந்தியாவின் #Launch2020 இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ட்விட்டர் உலக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் மகேஷ் பாபுவின் மகரிஷி ஆகியவை ட்விட்டரில் 2019ன் சிறந்த செல்வாக்கு மிக்க ஹேஷ்டேக்குகளாக இருந்ததாக பட்டியலிட்டு உள்ளனர். 

உண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேஷ்டேக் தினத்தன்று ட்விட்டர் இந்தியா பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்டில், ஜனவரி 1 முதல் ஜூன் மாதம் இறுதிவரை விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து  ஏப்ரல் 11 முதல் 2019 மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான #LokSabhaElections2019 ஹேஷ்டேக் இடம்பெற்றது.

இந்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது பயன்படுத்தப்பட்ட #CWC19  என்ற ஹேஷ்டேக் 3-வது இடத்தில் உள்ளது.

மே 9 அன்று வெளியான மகேஷ்பாபுவின் தெலுங்கு படம் #Maharshi நான்காவது இடத்தைப் பிடித்தது. 5-வது இடத்தில் #HappyDiwali என்ற ஹேஷ்டேக் இருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர், இந்த ட்வீட்டை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் இது இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக்குகளில்  ஒன்றுதான். 2019-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com