ஏகே 62: அஜித்துடன் உடன் இணையும் ஐஸ்வர்யா ராய்...?

நடிகர் அஜித் நடிக்கும் 62-வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏகே 62: அஜித்துடன் உடன் இணையும் ஐஸ்வர்யா ராய்...?
Published on

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் நடிக்கும் 62-வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2000 ஆம் ஆண்டில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com