'அகண்டா 2' படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்

போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்து வரும் 'அகண்டா 2' படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
'அகண்டா 2' படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்
Published on

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது.

இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற 9-ந் தேதி (நாளை) மாலை 06.03 மணிக்கு வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com