காதலியை கரம்பிடித்த தெலுங்கு நடிகர் அகில்

வரும் 8-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஐதராபாத்,
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஜைனப் ரவ்ட்ஜியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணத்திற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள் நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும். சிரஞ்சீவி, சுரேஷ், ராம் சரண், உபாசனா, வெங்கடேஷ், ராணா, சுரேஷ் பாபு உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்று வருடங்களாக அகில், ஜைனப் காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது.
வரும் 8-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






