இந்திய வரைபடத்தை மிதித்ததாக நடிகர் அக்ஷய் குமாருக்கு எதிராக விமர்சனம்

இந்திய வரைபடத்தை மிதித்ததாக நடிகர் அக்ஷய் குமாருக்கு எதிராக பரவலான டிரோல்களும் விமர்சனங்களும் எழுந்து உள்ளன.
இந்திய வரைபடத்தை மிதித்ததாக நடிகர் அக்ஷய் குமாருக்கு எதிராக விமர்சனம்
Published on

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அக்ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மியின் செல்பி படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

குட் நியூஸ் புகழ் ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் சிக்கினார். இணையவாசிகளின் விமர்சனங்களும் பரவலாக உள்ளன. டிரைலரில் அக்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடப்பது போன்று ள்ளது. இந்திய வரைபடத்தை அக்ஷய் அவமதித்ததாக இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்

தனது வட அமெரிக்க சுற்றுப்பயணத்தை விளம்பரப்படுத்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அக்ஷய் குமார் தவிர, இந்த வீடியோவில் திஷா பதானி, நோரா பதேஹி, மவுனி ராய் மற்றும் சோனம் பஜ்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவில் அனைத்து பிரபலங்களும் நடந்து செல்லும் பூகோள பந்தின் மேல் நடந்து செல்வது போல் வீடியோ காட்டுகிறது.

உலகின் மற்ற நாடுகளின் வரைபடத்தில் மற்ற பிரபலங்கள் காலடி எடுத்து வைக்கும் போது, அக்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் அடியெடுத்து வைக்கிறார். . வீடியோ பகிரப்பட்ட உடனேயே, அக்ஷய் குமானுக்கு எதிராக விமர்சனங்களும் டிரோல்களும் குவிந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com