3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி

3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி.
3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி
Published on

கொரோனா பரவலால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நடிகர் நடிகைகள் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் திரைப்பட நடன கலைஞர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். 3 ஆயிரத்து 600 நடன கலைஞர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களை வழங்குவதாக அவர் அறிவித்து உள்ளார். தொண்டு நிறுவனம் மூலமாக இந்த உதவிகளை அவர் செய்ய இருக்கிறார்.

அக்ஷய்குமார் கடந்த வருடம் கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தபோது ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிகளும் வழங்கினார். தற்போது கொரோனா 2-வது அலையிலும் தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன், மருந்து, உணவு பொருட்கள் வழங்க கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com