கைகுலுக்கிய அக்சய்குமார் - பிளேடால் கிழித்த ரசிகர்

தனது கையை ரசிகர் ஒருவர் பிளேடால் கிழித்த அதிர்ச்சி தகவலை அக்‌சய்குமார் வெளியிட்டு உள்ளார்.
கைகுலுக்கிய அக்சய்குமார் - பிளேடால் கிழித்த ரசிகர்
Published on

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அக்சய்குமார் தமிழில் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது கையை ரசிகர் ஒருவர் பிளேடால் கிழித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அக்சய்குமார் கூறும்போது, ''நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நிறைய ரசிகர்கள் என்னுடன் கைகுலுக்க வந்தார்கள்.

நானும் அவர்களுடன் கை குலுக்கிக் கொண்டு இருந்தேன். அப்போது எனது கையில் திடீரென்று ரத்தம் கொட்டியதை பார்த்து அதிர்ந்தேன். அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் விரல்களுக்கு இடையே பிளேடு இருந்தது. கைகுலுக்கிய வாய்ப்பை பயன்படுத்தி எனது கையை பிளேடால் கிழித்து விட்டார்.

பிரபலங்கள் மீதுள்ள அன்பு அல்லது முரட்டுத்தனத்தால் இப்படி செய்கிறார்களா. இதை செய்ய அவர்களை தூண்டியது எது என்று புரியாமல் குழம்பினேன்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com