மூன்றாவது பெரிய ஓபனிங்கை பெற்ற அக்சய் குமாரின் ''ஹவுஸ்புல் 5''


Akshay Kumar’s Housefull 5 takes the third biggest opening of Bollywood in 2025
x
தினத்தந்தி 8 Jun 2025 4:45 AM IST (Updated: 8 Jun 2025 5:29 AM IST)
t-max-icont-min-icon

நேற்று முன்தினம் திரைக்கு வந்த ''ஹவுஸ்புல் 5'' திரைப்படம் நல்ல ஓபனிங்கை பெற்றிருக்கிறது.

சென்னை,

நேற்று முன்தினம் திரைக்கு வந்த அக்சய் குமாரின் ''ஹவுஸ்புல் 5'' திரைப்படம் , எதிர்பார்த்தபடி, ரூ. 24 கோடி வசூல் செய்து நல்ல ஓபனிங்கை பெற்றிருக்கிறது. இது ''சாவா'' மற்றும் சிக்கந்தருக்குப் பிறகு, இந்த ஆண்டு வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த 3-வது பாலிவுட் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

விடுமுறை இல்லாத நாளில் வெளியான போதிலும், இது முந்தைய பாகங்களை விட மிகப்பெரிய தொடக்கத்தை பெற்றிருக்கிறது.

இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கிஸ் பக்ரி, பர்தீன் கான், சவுந்தர்யா சர்மா, ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத், நானா படேகர் உள்ளிட்ட 24 நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

1 More update

Next Story