திரிஷ்யம் 3-ல் இருந்து விலகினாரா அக்‌சய் கண்ணா?


Akshaye Khanna walks out of Ajay Devgn’s Drishyam 3?
x
தினத்தந்தி 24 Dec 2025 9:45 PM IST (Updated: 24 Dec 2025 9:45 PM IST)
t-max-icont-min-icon

அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 2 படத்தில் அக்‌சய் கண்ணா முக்கிய வேடத்தில் நடித்தார்.

சென்னை,

இந்த ஆண்டின் தொடக்கத்தில், விக்கி கவுஷலின் சாவா படத்தில் ஔரங்கசீப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அக்‌சய் கன்னா. அப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.

தற்போது ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். இப்படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.

இப்போது படங்களில் அவரது தேவை அதிகரித்து வரும் நிலையில், அக்‌சய் கண்ணா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுவது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 3-ஐ பாதித்ததாக தெரிகிறது.

அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 2 படத்தில் அக்‌சய் கண்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது 3-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், திரிஷ்யம் 3-ன் தயாரிப்பாளர்கள் அக்‌சய் கன்னாவின் சம்பள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததுபோல் தெரிகிறது.

இதனால், அக்சய் கண்ணா இந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாகிவிட்டால், மூன்றாம் பாகத்தில் அக்‌சய் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

1 More update

Next Story