‘நமஸ்கார்’ என்ற ஒரே வார்த்தையில் அரங்கைக் கவர்ந்த ஆலியா பட்

நடிகை ஆலியாபட் லண்டனில் நடந்த பாப்டா விழாவில் பங்கேற்றார்.

‘நமஸ்கார்’ என்ற ஒரே வார்த்தையில் அரங்கைக் கவர்ந்த ஆலியா பட்
Published on

பாலிவுட் திரை உலகில் ரசிகர்களின் ‘பேவரைட் ஐகான்’ ஆக திகழ்ந்து வருபவர் ஆலியாபட். இந்நிலையில் ஆலியாபட் லண்டனில் நடந்த பாப்டா விழாவில் பங்கேற்றார். விழாவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஆலியாபட் ‘நமஸ்கார்’ என தனது பேச்சை தொடங்கினார். லண்டன் ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடந்த 79-வது பாப்டா திரைப்பட விருது விழாவில் சிலியன் மர்பி, கேட்ஹட்சன் போன்ற உலகளாவிய தொகுப்பாளர் பட்டியலில் ஆலியாபட் இணைந்தார்.

நிகழ்ச்சியில் பேசும் போது ‘நமாஸ்கர்’ என பேச தொடங்கிய ஆலியாபட், பின்னர் இப்போதே சப்டைட்டிலை தேடாதீர்கள் என ஆங்கிலத்தில் நகைச்சுவையாக பேசி அரங்கத்தில் சிரிப்பலையை உருவாக்கினார். ஆலியா பட்டின் இந்த சுவாரஸ்யமான பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, டிரெண்டாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com