கியாரா அத்வானியின் புதிய லுக் - ஆச்சரியத்தில் ஆலியா பட்... வைரல்

கியாராவின் இந்த புதிய லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கியாரா அத்வானியின் புதிய லுக் -   ஆச்சரியத்தில் ஆலியா பட்... வைரல்
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை 2023-ம் ஆண்டு திருமணம் செய்த கியாராவுக்கு, கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “சராயா மல்ஹோத்ரா” என்று பெயர் சூட்டி உள்ளனர்.

குழந்தை பிறந்த பின் புதிய படங்களில் கமிட்டாகாத கியாரா, தற்போது சாக்லேட் நிற கோர்செட் ஸ்டைல் உடையில் ஸ்டைலிஷ் தோற்றத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகை ஆலியா பட், “ரொம்ப அழகு”(Gorgeeeeeeee) என்று கமெண்ட் செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது. கியாராவின் இந்த புதிய லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com