'ஆல்பா' படப்பிடிப்பு தளத்தில் ஆலியா பட் !

நடிகை ஆலியா பட் ஆல்பா படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'ஆல்பா' படப்பிடிப்பு தளத்தில் ஆலியா பட் !
Published on

காஷ்மீர்,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது ஒய்ஆர்எப் ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆல்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆலியா பட்டுடன் இணைந்து ஷர்வரி வாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தினை 'தி ரெயில்வே மென்' என்ற தொடர் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஷிவ் ரவைல் இயக்குகிறார். மேலும் இப்படத்தினை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மும்பை மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளது. ஆக்சன் படமாக தயாராகும் இந்த படத்தில் பாபி தியோல் மற்றும் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை ஆலியா பட் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com