ஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்தின் டீசர் வெளியானது

ஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்தை தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
ஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்தின் டீசர் வெளியானது
Published on

மும்பை,

இந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'ஹைவே, உட்தா பஞ்சாப், ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி' உள்ளிட்ட படங்கள் மிகவும் வரவேற்பினை பெற்றன. அடுத்தபடியாக இவர் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையில் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் 'லவ் அன்ட் வார்' என்ற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார் ஆலியா பட்.

தற்போது ஆலியா பட், 'ஜிக்ரா' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'ஜிக்ரா' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த படத்தின் டீசர் குறித்த பதிவை நடிகை ஆலியா பட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com