ஆர்ஆர்ஆர் அதிருப்தி: ராஜமௌலியை அன்பாலோ செய்த நடிகை அலியா பட்

ஆர்ஆர்ஆர் படத்தில் அலியா பட் எங்கேப்பா என பாலிவுட் ரசிகர்கள் தேடும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறிதாக வந்து சென்றது.
ஆர்ஆர்ஆர் அதிருப்தி: ராஜமௌலியை அன்பாலோ செய்த நடிகை அலியா பட்
Published on

மும்பை

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் மும்பை கேங்ஸ்டர் கங்குபாயாக நடித்து சோலோவாகவே 100 கோடிக்கும் அதிகமான கலெக்ஷனை அள்ளி இருந்தார் அலியா பட்.

ரூ.400 கோடி தயாரிப்பில் உருவான இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் , படக்குழு மகிழ்ச்சியில் இருந்து வரும் வேளையில், படத்தின் நாயகிகளில் ஒருவரான அலியா பட் சோகத்தில் இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கங்குபாய் படத்திற்கு பிறகு ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அலியா பட் நடிப்பு எப்படி இருக்கும் என ரசிகர்கள் பலத்த ஆவலுடன் தியேட்டருக்கு சென்ற நிலையில், பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆரை அந்த அளவுக்கு மாஸாக காட்டிய இயக்குநர் ராஜமெளலி அஜய் தேவ்கனுக்கு கூட பிளாஷ்பேக்கில் அப்பா ரோல் கொடுத்து கொஞ்சம் வெயிட் காட்டியிருந்தார். ஆனால், அலியா பட் எங்கேப்பா என பாலிவுட் ரசிகர்கள் தேடும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறிதாக வந்து சென்றது. அலியா பட் ரசிகர்களை மட்டுமின்றி அலியா பட்டையும் ரொம்பவே அப்செட் ஆக்கியது.

தென்னிந்திய திரையுலகில் 'ஆர்ஆர்ஆர்' முதல் படம். ஆனால், இதில் அவர் எதிர்பாராத்ததுபோல் பெரிய கதாபாத்திரம் இல்லை. படத்தில் மொத்தமே ஏழு சீன்கள் அளவுக்கே அவருக்கு காட்சிகள். அதிலும், ஒரு காட்சியில் மட்டுமே பெரிய டயலாக் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதன் காரணமாகவே துபாய், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஹீரோக்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு புரமோஷன் செய்த ராஜமெளலி உடன் ஹீரோயின் அலியா பட் எங்கேயும் வர முடியாது என அதிரடியாக மறுத்து விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. இயக்குநர் ராஜமெளலி இப்படி தன்னை இருட்டடிப்பு செய்வார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அலியா பட் அவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும் கூறபட்டது.

தனது அடுத்த படமான பிரம்மாஸ்த்ரா படத்தின் புரமோஷன்களில் தீவிரமாக இறங்கி உள்ள நடிகை அலியா பட் ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த போஸ்டர்களையும் தூக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அதிருப்தியில் இருந்த அலியா பட் இப்போது ராஜமௌலியை அன்ஃபாலோ செய்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com