“கோல்டன் குளோப்” விருது வென்ற ஆலியா பட்

நடிகை ஆலியா பட்டிற்கு சவுதி அரேபியாவில் நடைபெற்ற செங்கடல் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
“கோல்டன் குளோப்” விருது வென்ற ஆலியா பட்
Published on

சவுதி அரேபியா ஜெட்டாவில் வரும் 13ம் தேதிவரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இதன் துவக்க விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில் இந்திய நடிகர் சல்மான்கானும் இன்று கலந்துகொள்ள உள்ளார்.

சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் செங்கடல் திரைப்பட விழாவில் சிறப்பான நடிகர், நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது. 5-வது ஆண்டாக தற்போது இந்த திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. தனது தொடக்க காலத்தில் மிகுந்த ஆர்வமாக நடித்ததாக ஆலியா பட் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஓமர் ஷெரிப் விருதை துனிசிய நடிகை ஹெண்ட் சப்ரி வென்றார்.

View this post on Instagram

கோல்டன் குளோப் எக்ஸ் பக்கத்தில் கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள்.மத்திய ஆசிய, ஆசிய, மற்றும் அதனையும் தாண்டிய பாதிப்புகளை தனது ஆற்றலினால் உண்டாக்கிய இயல்புக்கு மீறிய திறமைசாலி ஆலியா பாட். முதல்முறையாக செங்கடல் திரைப்பட விழாவுடன் கோல்டன் குளோப் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் இந்த விருது சென்று சேரவேண்டுமென நினைக்கிறேன். ஹெண்ட், ஆலியா ஆகிய இருவரும் வருங்கால சர்வதேச திரைப்படத்தை தங்களது தைரியம், கலை நேர்த்தி, சிறந்த நோக்கத்தினால் வடிவமைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com