மீண்டும் டீப் பேக் வீடியோவில் ஆலியா பட்

ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் டீப் பேக் வீடியோவில் ஆலியா பட்
Published on

மும்பை,

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப டீப் பேக் வீடியோக்கள் நடிகைகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் வலியுறுத்தி உள்ளனர்.

போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் அடங்கவில்லை. தொடர்ந்து டீப் பேக் ஆபாச வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே நடிகை ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியானது. இன்னொரு பெண் உடலோடு ஆலியா பட்டின் முகத்தை ஒட்டி வெளியிட்டு இருந்தனர். தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, கஜோல், கத்ரினா கைப், ராஷ்மிகா மந்தனா போன்றோரின் டீப் பேக் வீடியோக்களும் வெளிவந்தன.

இப்போது மீண்டும் ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பாலிவுட் நடிகை வாமிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோவில் இருந்த வாமிகாவின் உடலோடு ஆலியா பட்டின் முகத்தை ஒட்டி இந்த டீப் பேக் வீடியோவை வெளியிட்டு உள்ளனர். இதற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com