யாரை குறிப்பிட்டார் 'ஸ்பிரிட்' பட இயக்குனர்?...வைரலாகும் பதிவு

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகியநிலையில், புதிய கதாநாயகியாக திரிப்தி டிம்ரி இணைந்தார். தீபிகா படுகோனே விலகியது பேசு பொருளாகியநிலையில், இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "நான் ஒரு நடிகருக்கு கதை சொல்லும்போது, 100 சதவீதம் நம்பிக்கையுடன் சொல்கிறேன். அதை யாருக்கும் சொல்ல கூடாது என ஒரு சொல்லப்படாத உடன்படிக்கை எங்களிடம் இருக்கிறது.
ஆனால் அதை மீறி நீங்கள் யார் என்பதை காட்டிவிட்டீர்கள். ஒரு இயக்குனராக பல வருட கடின உழைப்பை போட்டிருக்கிறேன். படம் எடுப்பதுதான் எனக்கு எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. புரியாது. எப்போதும் புரியாது" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
சந்தீப் ரெட்டி வங்கா, யாரை குறிப்பிட்டு இந்த பதிவை பகிர்ந்துள்ளார் என்பது குறித்தும், அது தீபிகாவாக இருந்தால் அவரின் பதில் என்னவாக இருக்கும் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.






