திரில்லர் கதைக்களத்தில் '12ஏ ரெயில்வே காலனி'... டீசர் வெளியீடு


Allari Naresh acts in a thriller: 12A Railway Colony
x

இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ். இவர் தற்போது ஒரு திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். நானி காசர்கட்டா என்ற புதுமுகம் இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்,

'பொலிமேரா வெப்தொடர் நடிகை டாக்டர் காமக்சி பாஸ்கர்லா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா மற்றும் மதுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு '12ஏ ரெயில்வே காலனி' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story