அல்லரி நரேஷ்-காமக்சி நடித்த திகில் படம்...ரிலீஸ் தேதி அறிவிப்பு


Allari Naresh’s Horror Film 12A Railway Colony Gets a Release Date
x

இந்தப் படத்தை நானி காசர்கட்டா இயக்கி அறிமுகமாகிறார்.

சென்னை,

நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் பெற்ற நடிகர் அல்லரி நரேஷ் நடித்த திகில் படம் 12எ(12A) ரெயில்வே காலனி. இந்தப் படத்தை நானி காசர்கட்டா இயக்கி அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இந்த படம் நவம்பர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா, மதுமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த 12எ(12A) ரெயில்வே காலனி படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story