“தென்னிந்திய நடிகரை கல்யாணம் பண்ணிக்கோங்க” - மிருணாளிடம் கூறிய தயாரிப்பாளர்

மிருணாள் தாகூர் தற்போது 'டகோயிட்' படத்தில் நடித்துள்ளார்.
“தென்னிந்திய நடிகரை கல்யாணம் பண்ணிக்கோங்க” - மிருணாளிடம் கூறிய தயாரிப்பாளர்
Published on

ஐதராபாத்,

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ’சீதா ராமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் 'டகோயிட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வர்வேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், இப்படத்தின் வெற்றி விழா நடந்தது.

அதில் பிரபல தயாரிப்பாளர் கலந்து கொண்டு பேசும்போது சுவாரசியமான கருத்தை பகிர்ந்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.

Also Read
“என்னை விலை பேசினார்கள்…”- பிக்பாஸ் பிரபலம் அதிர்ச்சி தகவல்
“தென்னிந்திய நடிகரை கல்யாணம் பண்ணிக்கோங்க” - மிருணாளிடம் கூறிய தயாரிப்பாளர்

மிருணாள் தாகூரின் நடிப்பை பாராட்டிய அவர், “நீங்கள் தென்னிந்திய சினிமாவில் யாரையாவது திருமணம் செய்து இங்கையே செட்டில் ஆகி விடுங்கள். நீங்கள் தெலுங்கில் இன்னும் அதிக படங்கள் செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆசை’ என்றார்.

சமீபத்தில், தனுஷை காதலிப்பதாக வதந்திகள் பரவியநிலையில், அதற்கு மிருணாள் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com