ஜப்பானிய நடன இயக்குனருடன் அல்லு அர்ஜுன், அட்லீ...


Allu Arjun, Atlee with Japanese choreographer...
x

ஜப்பானிய நடன இயக்குனர் ஹோகுடோ கோனிஷியுடன் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை,

''புஷ்பா 2 தி ரூல்'' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயுடன் இணைந்திருக்கிறார்.

('AA22xA6') என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த படப்ப்டிப்பு முடிவடைந்தநிலையில், தற்போது குழு அபுதாபிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், ஜப்பானிய-பிரிட்டிஷ் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஹோகுடோ கோனிஷியுடன் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஹோகுடோ கோனிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கட்தில் படத்தில் பணிபுரிவது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் (BTS) ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story